/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக்கோரி மனு
/
கட்டுமான பொருட்கள் விலையை கட்டுப்படுத்தக்கோரி மனு
ADDED : ஏப் 02, 2025 06:39 AM
தேனி : கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உழைக்கும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் குருசாமி தலைமையில் மனு அளித்தனர்.
மனுவில், கட்டுமான பொருட்களான எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என இருந்தது.கனரக வாகன ஓட்டுநர் நலசங்கம் நிர்வாகிகள் செந்தில்குமார், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழங்கிய மனுவில், கனிமங்கள் கொண்டு செல்லும் லாரி டிரைவர்கள மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பபடுகின்றனர்.
டிரான்சீட் பாஸ் வழங்க மறுக்கும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என இருந்தது.

