ADDED : மார் 16, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : ஆண்டிபட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் பவுர்ணமி சந்திரன். தனது ஊரைச் சேர்ந்த சிலருடன் பழநிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார்.செங்குளத்துப்பட்டி முனீஸ்வரன் கோயில் அருகே செல்லும் போது, அந்த வழியாக சென்ற டூவீலர் பவுர்ணமி சந்திரன் மீது மோதியது. காலில் காயம்பட்ட பவுர்ணமி சந்திரன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த ஆனந்திடம் விசாரணை செய்து வருகின்றனர்.

