/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிலுவை திட்டங்களை தேர்தல் அறிவிப்பிற்கு முன் துவக்க திட்டம்
/
நிலுவை திட்டங்களை தேர்தல் அறிவிப்பிற்கு முன் துவக்க திட்டம்
நிலுவை திட்டங்களை தேர்தல் அறிவிப்பிற்கு முன் துவக்க திட்டம்
நிலுவை திட்டங்களை தேர்தல் அறிவிப்பிற்கு முன் துவக்க திட்டம்
ADDED : மார் 08, 2024 01:25 AM
கம்பம்: லோக்சபா தொகுதியில் அரசு அறிவித்த நிலுவை திட்டங்களை தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன் பணி துவக்க பட்டியல் தயாரித்து வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்பு சில நாட்களில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அரசியல் கட்சியினரும், போட்டியிட தயாராக உள்ளவர்களும் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று தி.மு.க.வும், அ.தி.மு.கவும், ஓட்டு சதவீதத்தை அதிகரித்து காட்ட பா.ஜ.வும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆளும் தி.மு.க. அரசு பல்வேறு வழிகளை கையாள முன்னெடுப்புக்களை செய்து வருகிறது.
குறிப்பாக ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும், அறிவித்து நிலுவையில் உள்ள திட்டங்களின் பட்டியல், அந்த பட்டியலில் உள்ளதில், எந்த பணியை செய்தால்
கணிசமான ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும் என்ற நோக்கில் உளவுத் துறையினருக்கு மிக அவசரம் என்ற தலைப்பிட்டு அசைன்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் முக்கிய திட்டமாக இருந்தால் தேர்தல் - தேதி அறிவிப்பதற்குள் பணிகளை துவக்க வேண்டும் என்பதால், உளவுத் துறை ஜரூர் காட்டிதகவல் திரட்டி வருகிறது.

