ADDED : நவ 30, 2025 04:23 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளத்தில் பி.எல்.ஓ.,க்களான அங்கன்வாடி, சத்துணவு, நகராட்சி பணியாளர்கள், வாக்காளர்களுக்கு வழங்கிய சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்ததிற்கான படிவங்களை வழங்கி இருந்தனர்.
இவற்றை பூர்த்தி செய்து திரும்ப பெறும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 'டிட்வா' புயல் சாரல் மழையிலும் திருத்த பணிக்கான பூர்த்தி செய்த படிவத்தை திரும்ப பெறும் பணிகளில் குடையை பிடித்தபடி களப்பணியாற்றினார். வாக்காளர்களும் முக்கியத்துவம் கருதி படிவம் வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.--
