ADDED : பிப் 07, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 13,160 மாணவர்கள் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு எழுத உளளனர். இவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் பிப்.,9ல் துவங்குகிறது.
இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் கல்வித்துறை சார்பில் நடந்தது. கல்வித்துறையினர் கூறுகையில், 'அரசு பொதுத்தேர்விற்கான பிளஸ் 2 செய்முறைத்தேர்வு பிப்.,9 முதல் பிப்., 14 வரை நடக்கிறது. தேர்வு 118 மையங்களில் நடக்கிறது. தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உயிரியியல், வேதியியல், இயற்பியல், உயிரி தாவரவியல், உயிரி விலங்கியல், கணினி அறிவியல், வேளாண், புவியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் செய்முறைத்தேர்வு நடக்கிறது,' என்றனர்.
