ADDED : பிப் 10, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
தேனி: மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உட்பட உதவி பெறும், பகுதி உதவி தனியார் என 140க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகளில் 13,160 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு பொதுத்தேர்விற்கான செய்முறைத்தேர்வு நேற்று துவங்கியது.
கடந்த ஆண்டை விட 10 தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது 118 மையங்களில் செய்முறைத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வு பிப்., 14 வரை நடத்த கல்வித்துறையினர் திட்டமிட்டுள்ள னர்.
செய்முறைத்தேர்வில் வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், வேளாண், நர்சிங், அடிப்படை இயந்திரவியல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பாடபிரிவுகளில் மாணவர்கள் செய்முறைத்தேர்வு எழுது கின்றனர்.
