/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
ADDED : டிச 12, 2025 06:34 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த ரவி 39, என்பவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமி. தர்மபுரி மாவட்டம் நாரியம்பட்டியில் தனது தாத்தா, பாட்டி வீட்டில் தங்கி படித்துள்ளார்.
ஒரு ஆண்டுக்கு முன்பு திருவிழாவிற்கு சென்ற இடத்தில், திருச்செங்கோடைச் சேர்ந்த ரவி 39, யுடன் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்து கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி பெரியகுளம் வந்தார்.பெரியகுளத்தில் கூலி வேலை பார்க்கும் ரவி, ஜூன் 8 ல் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் வளாகத்தில் சிறுமியை திருமணம் செய்தார்.
தற்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். பெரியகுளம் ஒன்றிய ஊர்நல அலுவலர் மாரியம்மாள் புகாரில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, ரவி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
'கோயில் வளாகத்தில் அனுமதித்தது யார் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் முன்பு அறநிலையத்துறை அலுவலகம் செயல்படுகிறது.
கோயிலில் திருமணம் செய்ய செயல் அலுவலரிடம், ஆதார், வயது, எந்த ஊர் என்ற விபரங்களுடன் சான்று வழங்கி அனுமதி பெற்று திருமணம் செய்ய வேண்டும். கோயில் வளாகத்தில் விநாயகர் கோயிலில் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இதற்கு அனுமதியளித்தவர் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

