/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பத்தில் பரவும் அம்மை கட்டு நோய்
/
கம்பத்தில் பரவும் அம்மை கட்டு நோய்
ADDED : செப் 21, 2024 06:13 AM
கம்பம்: கம்பம் பகுதியில் சிறுவர்கள் பரவலாக அம்மை கட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மைக்கட்டு நோய் அல்லது பொன்னுக்குவீங்கி 'மம்ஸ்' என்னும் நோய் ஒரு வித வைரசால் ஏற்படுகிறது. இந் நோய் பாதித்தால் காது மடலுக்கு கீழ் அமைந்துள்ள உமிழ்நீர் சுரப்பி வீக்கம் அடைந்து வலியுடன் கன்னம் உப்பலாக தோன்றும். வைரஸ் நோய் தாக்கத்தால் செவியோர உமிழ்நீர் சுரப்பி வீக்கி வலியால் அவதிப்படுவர். இதனால் உண்ணுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் சிரமம் ஏற்படும்.
நீண்ட காலமாக இல்லாமல் இருந்த இந்த வைரஸ் தாக்குதல் தற்போது காணப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் உள்ள சிறுவர்களுக்கு இந்த நோய் தாக்குதல் காணப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பே இந்த நோய் கண்டறியப்பட்டது. தேவையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோய் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது.
இதை கட்டுப்படுத்த அசி குளோவிர் ( Aciclovir ) மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளது. இதனை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கி நோய் குணமாகி வருகிறது.
கிராம செவிலியர்களும், சுகாதார மேற்பார்வையாளர்களும் தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர், என்றனர்.