ADDED : ஏப் 08, 2026 09:02 PM

அ நிறம் | அளவு
தேனி:தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
தேனி எஸ்.பி.சினேகபிரியா தலைமையில் குரங்கனியில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி போலீசார் ஊர்வலம் நடந்தது. அப்போது பொது மக்களுக்கு ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
