ADDED : ஏப் 20, 2026 11:32 PM
தேனி:தேனி மாவட்டத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிய உள்ள நிலையில் தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்வடைகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் தீவிரப்படுத்தப்படும். இன்று மாலைக்கு பின் மாவட்டத்திற்கு தொடர்பு இல்லாதவர்கள் வெளியேற வேண்டும். பிரசாரம் முடிந்தவுடன் மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்வார்கள். விடுதியில் புதிதாக அடுத்த 2 நாட்களில் தங்குபவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு விடுதிகளில் தங்கும் மாவட்டத்திற்கு தொடர்பில்லாதவர்கள் குறித்த பட்டியலை சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் பறக்கும் படையினருடன் சேர்ந்து போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட உள்ளனர்.
