மின் ஒயர் திருடும் கும்பலை கைது செய்வதில் போலீஸ் மெத்தனம்
மின் ஒயர் திருடும் கும்பலை கைது செய்வதில் போலீஸ் மெத்தனம்
ADDED : செப் 25, 2026 07:21 PM
கம்பம், செப் 26
கம்பம் பள்ளத்தாக்கில் குடிநீர் மோட்டார் மின் ஒயர்களை திருடும் கும்பலை கைது செய்வதில் போலீசார் மெத்தனம் காட்டுவதாக உள்ளாட்சி நிர்வாகத்தினர் புகார் கூறுகின்றனர்.
உள்ளாட்சிகளில் குடிநீர் மோட்டார் ஒயர்களை திருட்டு அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாற்றங்கரையில் பல ஊராட்சிகளின் குடிநீர் பம்பிங் அறைகள் உள்ளன. ஆகஸ்டில் 16 ல் கோகிலாபுரம் ஊராட்சி மோட்டார் அறையில் 60 மீ., ஒயர், ஆனைமலையன்பட்டி ஊராட்சி மோட்டார் அறையில் 200 மீ., குடிநீர் வாரிய அறையில் 100 மீ., ராயப்பன்பட்டி மோட்டார் அறையில் 100 ஆம்ஸ் பீஸ் கேரியர் என ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது. காப்பர் விலை அதிகம் என்பதால் இந்த ஒயர்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இது குறித்து ராயப்பன் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
செப் 21 ல் சுருளிப்பட்டி முல்லை பெரியாற்றங் கரையில் உள்ள கம்பம் நகராட்சி குடிநீர் மோட்டார் அறையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 200 மீ., ஒயர்கள் திருடு போனது. இச் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்வதில் ராயப்பன்பட்டி, மற்றும் கம்பம் தெற்கு போலீசார் மின்ஒயர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப்போக்கில் உள்ளனர். திருட்டு நடந்து ஒரு மாதமாகியும் இவ் வழக்கில் எந்தவித முயற்சியும் செய்யாததால் திருட்டு கும்பல் தைரியமாக அடுத்தடுத்த திருட்டை அரங்கேற்றி வருகின்றனர்.
