ADDED : ஜூலை 06, 2025 04:16 AM
விடுதியில் மர்ம மரணம்தேனி: கேரள மாநிலம் எட்டுமனுார் சுரேஸ் 51. இவரது மனைவி இறந்து விட்டார். குழந்தைகள் இல்லை. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டுவந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமானார். எட்டமனுார் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள விடுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தவகல் கிடைத்தது. இறந்தவரிடம் சோதனை செய்து, அதன்மூலம் அவரது சகோதரர் தினேஷ் என்பவருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தினேஷ் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை முயற்சி
நால்வர் மீது வழக்குதேனி: மாணிக்காபுரம் கிழக்கு தெரு ஆசைத்தம்பி 32, அப்பகுதியில் நடந்த திருவிழாவிற்காக வீட்டின் முன் சீரியல் விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. அது சரிவர அமைக்கவில்லை என அவரது தந்தை சங்குநாதன் சத்தம் போட்டு கொண்டிருந்தார். ஆனால், அங்கிருந்த சின்னமாணிக்கம், கருப்பசாமி, பெரியமாணிக்கம், விக்னேஷ் ஆகியோர் தங்களை சத்தம் போடுவதாக நினைத்து சின்னமாணிக்கம் அரிவாளை எடுத்து வந்த போது மற்றவர்கள் பிடித்து கொண்டனர். சின்னமாணிக்கம் வெட்டியதில் ஆசைத்தம்பி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரில் நால்வர் மீது வழக்கு பதிந்து வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.