ஆயிரம் லிட்டர் டீசல் திருட்டு
தேனி: பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெரு மணிக்குமார் 27. தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிகிறார். இவர் பணிபுரியும் நிறுவனம் தேனியில் மேம்பால பணி மேற்கொண்டு வருகிறது. மேம்பால பணிகள் நடைபெறும் பகுதி அருகே பணிக்கு பயன்படுத்தும் லாரி, ட்ரெயிலர் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி இருந்தனர். வாகனத்தின் டீசல் டேங்க் உடைக்கப்பட்டு இருப்பதாக ஆக.,7 ல் மணிக்குமாருக்கு காவலாளி சேகர் தகவல் தெரிவித்தார். மணிக்குமார் சென்று பார்த்த போது வாகனங்களில் இருந்த ரூ.1.16 லட்சம் மதிப்பிலான 1150 லிட்டர் டீசல் திருடு போனது தெரிந்தது. மணிக்குமார் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
தகராறு இருவர் மீது வழக்கு
தேனி: வாழையாத்துப்பட்டி ரஞ்ஜீத்குமார் 40, டிரைவர். இவர் தேனியில் இருந்து வீட்டிற்கு காரில் சென்ற போது வாழையாத்துப்பட்டி பிரிவில் பூதிப்புரம் சவுந்திரபாண்டியன் காரை மறித்தார். அவரது சகோதரர் மொக்கைசாமி மது விற்பனை செய்வதை எவ்வாறு புகார் தெரிவிக்கலாம் என கூறி காரின் கண்ணாடியை உடைத்து கொலைமிரட்டல் விடுத்தாக ரஞ்ஜீத்குமார் பழனிசெட்டிபபோலீசில் புகார் அளித்தார். டூவீலரில் சென்ற தன்மீது காரை மோதி கொலை மிரட்டல் விடுத்ததாக ரஞ்ஜீத்குமார் மீது புகார் அளித்தார். இருவர் அளித்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.