ADDED : அக் 03, 2025 12:03 AM
விபத்தில் வியாபாரி தொழிலாளி காயம்
தேனி: வீரபாண்டி அம்மாபட்டி கண்ணன் கோயில்தெரு பரமேஸ்வரன் 57. அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு டூவீலரில் வீடு திரும்பினார். கோட்டூர் அருகே வந்த போது அவருக்கு பின்னால் முத்துலாபுரம் செல்வராஜ் 48, ஓட்டி வந்த கார் டூவீலரில் மோதியது. இதில் காயமடைந்த பரமேஸ்வரன் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மகள் வைத்தீஸ்வரி புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி: அல்லிநகரம் வள்ளிநகர் ஜெயமணி 60, கூலித்தொழிலாளி. இவர் அம்மாபட்டி இளவேனிற்கு நகருக்கு டூவீலரில் சென்றார். வடபுதுப்பட்டி பிரிவில் ரோட்டை கடந்த போது பாரஸ்ட்ரோடு 4வது தெரு ராஜாகிளி ஓட்டி வந்த கார் ஜெயமணி டூவீலரில் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த ஜெயமணி தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவரது மனைவி மல்லிகா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விஷம் குடித்தவர் பலி
தேனி: அல்லிநகரம் வடக்கு மச்சாள்தெரு பாண்டியராஜ் 37, டிரைவர். ஓராண்டிற்கு முன் ஏற்பட்ட விபத்தில் சரிவர வேலைக்கு செல்லமால் இருந்தார். வயிற்கு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் செப்., 23ல் வீட்டில் விஷம் குடித்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மனைவி நாகலட்சுமி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தற்கொலை
போடி: திருமலாபுரம் செந்தில் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் 56. இவரது மனைவி இன்பம் 50. இவர் மகளிர் குழுவில் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. முருகன் வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டி இருந்தது தெரிந்தது. வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது மனைவி இன்பம் தூக்கிட்டு இறந்து கிடந்தார். கணவர் முருகன் புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் மாயம்
தேனி: பழனிசெட்டிபட்டி - கம்பம்ரோடு சேகர் 45, தனியார் பள்ளியில் அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி திவ்யா தனியார் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்தார். இந்நிலையில் செப்., 18 ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. சேகர் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.