மதுபாட்டில்கள்
பதுக்கிய 16 பேர் கைது
தேனி: மாவட்டத்தில்  மதுபாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 16 பேரை கைது செய்த போலீசார், ரூ.28,980 மதிப்புள்ள 161 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வீரபாண்டி அருகே பாலார்பட்டி நடுத்தெரு லட்சுமணன் 50, போடி நாட்டாண்மைகாரர் தெரு சந்திரா 60, அதேப்பகுதி குப்பிநாயக்கன்பட்டி மணிகண்டவாசகர் தெரு மது 40,  போடி பால்காரர் தெரு பாண்டி 71, போடி மீ.விலக்கு துரைராஜபுரம் காலனி வீரன் 42, போடி ராமகிருஷ்ணாபுரம் கிழக்குத்தெரு சுரேஷ் 40, சின்னமனுார் கே.கே.குளம் சசி 43, கோம்பை காலனி முருகன் 49, கம்பம் புதுப்பட்டி இந்திராகாலனி சுருளி 57, தேனியில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மேட்டுப்பட்டி கேசவன் 39, ஓடைப்பட்டி சமத்துவபுரம் பாலமுருகன் 29, காமாட்சிபுரம் பால்பண்ணைத் தெரு அழகுச் செல்வம் 48, கூடலுார் நாகராஜ் 46, கம்பம் சுங்கம் தெரு முகமதுமீரான் 43, அம்மச்சியாபுரம் வடக்குத்தெரு செந்தில் 40, போடி பத்ரகாளிபுரம் மாரியம்மன் கோயில் தெரு குமரேசன் 37, ஆகிய 16 பேர், அவரவர் வசிக்கும் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர். இந்த 16 பேரை கைது செய்த போலீசார் ரூ.28,980 மதிப்புள்ள 161 மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.:: ::துாக்க மாத்திரை
சாப்பிட்டவர் பலி
தேனி: ஊஞ்சாம்பட்டி வாசுநகர் பெலிசியன் 67. இவர் தனது மனைவி லில்லியுடன் 67, வீட்டில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இத்தம்பதியின் மகன் சுதாகர்  சென்னையில் டிரைவராக பணிபுரிகிறார். மருமகள் ரிஷா  ஆசிரியராக உள்ளார். குடும்ப பிரச்னையில்  மனம் உடைந்த பெலிசியன்  வீட்டில் வாங்கி வைத்திருந்த துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு வெளியே சென்றார். பின் கணவர் தேனி அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிந்து அங்கு சென்ற மனைவி  அவரை காணவில்லை. பின் மறுநாள் மருத்துவமனை வளாகத்தில் படுத்திருந்தவர், இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.::முன்விரோதத்தில் கழுத்தில் குத்து
தேனி:  அல்லிநகரம் அழகர்சாமி காலனி ராமசாமி 45. அதேப்பகுதி ஓடைத்தெரு முருகன் 43. இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்  பழகி வந்தனர்.  3 ஆண்டுகளாக பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் முருகன், ராமசாமியை அவதுாறாக பேசி வந்தார். நவ.2ல் ராமசாமி அல்லிநகரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது முருகன் தகாத வார்த்தைகளால்திட்டினார். அதனை ராமசாமி தட்டிக்கேட்டார். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கத்தியால்  ராமசாமியின் கழுத்தில் குத்தினார். பாதிக்கப்பட்ட ராமசாமி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அல்லிநகரம் எஸ்.ஐ., மலரம்மாள், முருகன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

