நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பூமலைக்குண்டு தெய்வேந்திரன், மயிலாடும்பாறை காளீஸ்வரன். இருவரும் உறவினர்கள். இவர்களுக்குள் பூமலைக்குண்டு பி.டி.ஆர்., வாய்க்கால் அருகே உள்ள இடம் தொடர்பாக பிரச்னை உள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ளது. இந்நிலையில் பிரச்னை நிலம் தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதில் தெய்வேந்திரன் புகாரில் மயிலைபாண்டி, காளீஸ்வரன் உள்ளிட்டோர் மீதும், காளீஸ்வரன் புகாரில் தெய்வேந்திரன், செழியன், ஜெயராஜ், லட்சுமணன், புவனம்மாள், லட்சுமி, சென்றாயன், மணிகண்டன், ராமசாமி, ராசாத்தி, கஸ்துாரி, நளினி, ரெங்கசாமி, செல்வி, ராஜேந்திரன், ஜக்கையன், சுந்தரபாண்டி உள்ளிட்ட மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிந்து வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

