மது வாங்கி தராதவர் மீது தாக்குதல்
தேனி: காமராஜர் தெரு தர்மர் 35. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சரவணன் 55. இருவரும் நண்பர்கள், ஒன்றாக மது குடித்து வந்தனர். இந்நிலையில் சரவணன், தர்மரிடம் மது வாங்கித் தரக்கூறி பிரச்னை செய்தார். இந்நிலையில் இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். காயமடைந்த தர்மர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சரவணன் மீது தேனி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விபத்தில் பெண் காயம்
தேனி: தென்கரை சத்யாநகர் முத்தையா 65. இவரது மனைவி பேச்சியம்மாள் 48. இத்தம்பதியின் மகன் தனுஷ் 21. இவரின் டூவீலரில் பேச்சியம்மாள் பின்னால் அமர்ந்து சென்றார். சோத்துப்பாறை ரோடு பாலசுப்பிரமணியர் கோயில் அருகே நடந்த விபத்தில், பேச்சியம்மாள் கீழே விழுந்தார். பின் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

