ADDED : ஜன 01, 2026 05:53 AM
கொலை மிரட்டல்: 7 பேர் மீது வழக்கு
தேனி: கோடாங்கிபட்டி சடையாண்டி கோயில் தெரு பாபு 48. இவரது உறவினர் சண்முகம் மகள் ஹரணிகா. இவரை ஓராண்டிற்கு முன் அதே பகுதியை சேர்ந் அஜய் காதல் திருமணம் செய்தார். அப்போது, பாபுவிற்கும், அஜய்க்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சடையாண்டி கோயில் அருகே பாபு டூவீலரில் சென்றார். அவரை மறித்த அஜய், உறவினர்கள் கீர்த்தனா, ராதிகா, அமுதா, லெனின், மேலும் இருவர் சேர்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். காயமடைந்த பாபு அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரில் அஜய், கீர்த்தன உள்ளிட்ட 7 பேர் மீது பழனிசெட்டிபட்டி மீது வழக்கு பதிந்தனர்.
சட்டக் கல்லுாரி மாணவர் மீது தாக்குதல்
மாணவர்கள் மீது வழக்கு
தேனி: பழனிசெட்டிபட்டி கபிலன் 20,தேனி அரசு சட்டக்கல்லுாரியில் 3ம் ஆண்டு படிக்கிறார். வகுப்பறையில் மின் விசிறியை ஆன் செய்தார். அப்போது அரண்மனைப்புதுாரை சேர்ந்த மாணவர் வசந்தகுமார் அசிங்கமாக பேசினார். இதனால் இருவரும் தகராறு செய்தனர். அங்கு இருந்த மற்ற மாணவர்கள் சண்டையை விலக்கினர். கல்லுாரி முடிந்து அருகே உள்ள பேக்கரியில் கபிலன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தார். வசந்தகுமார் நண்பர்கள் விக்னேஷ்வரன், சரண், செந்தில்குமாருடன் பேக்கரிக்கு சென்றார். நண்பர்கள் பிடித்துக்கொள்ள வசந்தகுமார், சரண் இணைந்து கபிலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். கடையில் இருந்தவர்கள் மாணவர்களை விலக்கி விட்டனர். காயமடைந்த மாணவர் கபிலன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரில் வீரபாண்டி போலீசார் கல்லுாரி மாணவர்கள் வசந்தகுமார் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு பதிந்தனர்.
மளிகை கடையில் திருட்டு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், ஏ.வாடிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வீரபாண்டி 33. பஸ்ஸ்டாப் அருகே மளிகை கடை வைத்துள்ளார். இரவில் மர்மநபர்கள் கடை பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் 25 ஆயிரம் பணம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட், பீடி பண்டல்களை திருடிச் சென்றனர். ஜெயமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
முதியவர் பலி
தேனி: கோட்டூர் வீரப்பன் கோவில் தெரு சுருளி 78. இவர் கோட்டூர் ஆவின் பாலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சுருளி மீதுமோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மனைவி சுருளியம்மாள் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

