ADDED : மார் 24, 2026 05:27 AM
தேனி: தேனி மாவட்ட தேர்தல் பணிகளை கண்காணிக்க போலீஸ் பார்வையாளராக கர்நாடகத்தை சேர்ந்தசிவப்பிரகாஷ் தேவராஜ் ஐ.பி.எஸ்., நியமிக்கப் பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு போலீஸ் பார்வையாளராக கடந்த வாரம் ராஜஸ்தானை சேர்ந்த உளவுத்துளை ஏ.டி.ஜி.பி., பிரபுலா குமார் நியமிக்கப்பட்டார். அவர் தேனி வந்தடைந்த இரவே அதிரடியாக மாற்றப்பட்டார். உடனே அவர் அதிகாலையில் புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து மத்திய அரசில் பணி செய்யும் பங்கஜ் கம்போஜ் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தேனிக்கு வரவே இல்லை எனவும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தேனி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடகா லோக் ஆயுக் எஸ்.பி., சிவப்பிரகாஷ் தேவராஜ் தேனிக்கு போலீஸ் பார்வையாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தேனிக்கு வந்தார். இவர் தேனிக்கு நியமிக்கப்பட்டுள்ள 3வது போலீஸ் அதிகாரி ஆவார். அவர் தேனி போலீஸ் எஸ்.பி., சிநேக ப்ரியா மற்றும் போலீசாருடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்த உள்ளார்.
