ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி சிறுவனிடம் போலீஸ் விசாரணை
ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி சிறுவனிடம் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 05, 2026 06:06 AM
பெரியகுளம்: பெரியகுளம் சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 9ம் வகுப்பு படிக்கும் சிறுவனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரியகுளத்தில் சிட்டி யூனியன் வங்கி உள்ளது. இதன் ஏ.டி.எம்., மையம் தென்கரை வடக்கு அக்ரஹாரம் தெருவில் உள்ளது. ஜன.28 இரவு ஏ.டி.எம்., மெஷினில் தவறான கார்டை உள்ளே செலுத்தி பணம் கொள்ளை முயற்சி நடந்தது. இதனை சி.சி.டி.வி., கேமரா வழியாக வங்கியின் தலைமை அலுவலகத்தில், கண்காணிப்பு அலுவலர் கண்காணித்துள்ளார்.
பெரியகுளம் வங்கி மேலாளர் சேக்முகமது புகாரில், தென்கரை எஸ்.ஐ., இதிரிஸ்கான், சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்ததில் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவன் ஒருவன் சந்தேகப்படும்படியாக உள்ளே சென்று ஏ.டி.எம்., மிஷினில் கார்டை செலுத்தி, நம்பரை அழுத்தி பணம் எடுக்க முயற்சித்துள்ளார். பணம் வரவில்லை.
இதனால் பல முறை முயற்சித்தும் பணம் கிடைக்கவில்லை. போலீசார் தென்கரையைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனை பிடித்தனர். விசாரணையில், 'சிறுவன் விளையாட்டுக்கு செய்ததாக தெரிவித்துள்ளார். சிறுவன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா என விசாரணை செய்து வருவதாக,' தெரிவித்தனர்.-
