UPDATED : அக் 06, 2026 10:35 PM
ADDED : அக் 06, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி நகரில் உள்ள மசாஜ் சென்டர்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தேனி போலீசார் சோதனை செய்தனர்.
நகர்பகுதியில் பல்வேறு இடங்களில் செயல்படும் 4 மசாஜ் சென்டர்களில் சோதனை நடந்தது. சோதனையில் கருவேல்நாயக்கன்பட்டியில் எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள மசாஜ் சென்டர் போலீசின் தடையில்லா சான்று பெறாமல் இயங்கியது தெரிந்தது. அதன் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
