ADDED : நவ 11, 2025 04:11 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழாவை 12 கிராமங்களில் ஒரே நாளில் கொண்டாடி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
முத்தனம்பட்டி, நாச்சியார்புரம், கோவில்பட்டி, வடக்கு மாலப்பட்டி, தெற்கு மாலப்பட்டி, லட்சுமிபுரம், கதிரியக்கவுண்டன்பட்டி, சீரங்காபுரம், நரசிங்காபுரம், குறும்பபட்டி, அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி கிராமங்களில் இருந்து காப்புக் கட்டிய பக்தர்கள் முத்தனம்பட்டியில் இருந்து அம்மன் கரகம் எடுத்து அந்தந்த கிராமங்களுக்கு மேளதாளத்துடன் ஊர்வலம் சென்றனர்.
பின் ஒவ்வொரு கிராமத்திலும் அம்மனுக்கு பொங்கலிட்டு, மாவிளக்கு ஏற்றி, முளைப்பாரி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தது. 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஒற்றுமையின் வெளிப்பாடாக கடந்த பல ஆண்டுகளாக இந்த பொங்கல் விழாவை தொடர்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

