அத்தியாவசிய பணியாளர்கள் தபால்ஓட்டு செலுத்தும் பணி துவங்கியது
அத்தியாவசிய பணியாளர்கள் தபால்ஓட்டு செலுத்தும் பணி துவங்கியது
ADDED : ஏப் 17, 2026 11:10 PM
தேனி;மாவட்டத்தில் அத்தியாவசிய பணியாளர்கள் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தபால் ஓட்டும் செலுத்தும் பணி துவங்கியது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.,23ல் நடக்கிறது. தேர்தல் நாளில் மின்வாரியம், போக்குவரத்து கழக ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர் தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாரியாக அத்தியாவசிய பணியாளர்கள் தபால் ஓட்டு செலுத்தும் பணி நேற்று துவங்கியது.
இதற்காக பெரியகுளம் சப்கலெக்டர் அலுவலகம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., அலுவலகம், போடி, ஆண்டிபட்டி தாலுகா அலுவலகங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரியகுளம் சப்கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்வமுடன் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர். அத்தியாவசிய பணியாளர்கள் ஏப்., 19 வரை தபால் ஓட்டுகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'போலீசார் தபால் ஓட்டுகளை தொகுதிவாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தபால் ஓட்டுகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார் ஏப்.,19,20,21 ஆகிய நாட்களில் தபால் ஓட்டுகளை பதிவு செய்யலாம்,' என்றனர்.
