/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர்களுக்கு மண் பாண்டம் தயாரிப்பு பயிற்சி
/
மாணவர்களுக்கு மண் பாண்டம் தயாரிப்பு பயிற்சி
ADDED : டிச 31, 2025 05:43 AM

போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் மாணவளுக்கான குளிர்கால முகாமில் மண் பாண்டம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு சமூக நலத்துறை சார்பில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகள், நாட்டுப்புற நடனம், ஓவியம், பாடுதல், யோகா நடந்து வரும் குளிர்கால முகாமில் பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன.
நேற்று மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி தலைமையில் போடி குலாலர் பாளையம் மண்பாண்டம் தயாரிக்கும் கூடத்தில் மாணவர்களுக்கு மண்ணில் சிற்பம், விளக்கு, மண்பாண்டம் தயாரிப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டனர்.
65 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். உடன் நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயப்பிரகாஷ், உப்புக்கோட்டை பச்சையப்பா உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன், ஏ.ஹைச்.எம்., டிரஸ்ட் அமைப்பாளர் வினிதா இருந்தனர்.

