/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு சிக்கல்
/
சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு சிக்கல்
சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு சிக்கல்
சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு சிக்கல்
ADDED : பிப் 29, 2024 05:58 AM
கம்பம், : அணைகளில் நீர் மட்டம் குறைந்து வருவதால், சுருளியாறு நீர் மின் நிலையத்தில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது.
கோடை காலம் துவங்கியுள்ளதால் நாளுக்கு நாள் மின் நுகர்வு, மின் தேவை அதிகரித்து வருகிறது. மழை பெய்து பெரும்பாலான அணைகளில் முழு அளவில் நீர்மட்டம் இருப்பதால், மின் உற்பத்தியும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3 ஆண்டுகளாக பழுதாகி இருந்த சுருளியாறு மின் நிலையம் பிப். முதல் உற்பத்தியை துவக்கியது. இங்கு காலை, மாலை என பீக் ஹவர்சில் மட்டும் மின் உற்பத்தி அதுவும் தேவைக்கேற்ப நடைபெறும். தற்போது தேவை அதிகம் இருப்பதால் 24 மணி நேரமும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதன்படி இரவங்கலாறு அணையிலிருந்து 81 கன அடி விடுவிக்கப்பட்டு, 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது மேகமலை பகுதியில் அதிக வெப்பம், கடும் வறட்சி நிலவுவதால் அணைகளில் நீர் மட்டம் மளமளவென குறைய துவங்கியுள்ளது.
இதனால் மின் உற்பத்தி அதிகபட்சம் மார்ச் இரண்டாவது வாரம் வரை மட்டுமே இருக்கும் என்றும், அதற்கு முன் 20 மெகாவாட் உற்பத்தி என்பது குறைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

