/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
67 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு
/
67 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு
ADDED : அக் 16, 2025 04:48 AM

கூடலுார்: கூடலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த ரத்த தான முகாமில் 67வது முறையாக ரத்ததானம் செய்த சிவசங்கரனை பாராட்டினர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்திய பல் மருத்துவ சங்கம், கார்டன் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது. வட்டார மருத்துவ அலுவலர் முருகன் முன்னிலையில், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பிரியா துவக்கி வைத்தார். இதில் நாராயணதேவன் பட்டியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் 67வது முறையாக ரத்த தானம் செய்தார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய பல் மருத்துவ சங்க தலைவர் கனநாதன், செயலாளர் முகுந்தன், பொருளாளர் அசோக்குமார், ஒருங்கிணைப்பாளர் சஷ்டிகா, கார்டன் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் பூர்ணிமா, செயலாளர் பூபேஷ் கண்ணன், பொருளாளர் சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.