ADDED : பிப் 26, 2026 06:46 AM

அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் கிரிஷ் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி கிருபா ஸ்ரீ, டெல்லியில் நடந்த 37 கிலோ எடைக்கு கீழ் உள்ளவர்களுக்கு இடையிலான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இதே மாணவி ஒற்றையருக்கான சிலம்பம் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார்.
பள்ளியில் நடந்த விழாவில் பதக்கம் பெற்று பெருமை சேர்த்த மாணவியை இயக்குனர் கயல்விழி, முதல்வர் சுரேஷ் சகாதேவன், மற்றும் நிர்வாகிகள் ஆசிரியர்கள் பாராட்டினர்.
