/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இ- பைலிங் முறை வழக்கறிஞர்களுக்கு உதவ 10 ஊழியர்கள் நியமனம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏற்பாடு
/
இ- பைலிங் முறை வழக்கறிஞர்களுக்கு உதவ 10 ஊழியர்கள் நியமனம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏற்பாடு
இ- பைலிங் முறை வழக்கறிஞர்களுக்கு உதவ 10 ஊழியர்கள் நியமனம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏற்பாடு
இ- பைலிங் முறை வழக்கறிஞர்களுக்கு உதவ 10 ஊழியர்கள் நியமனம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏற்பாடு
ADDED : டிச 10, 2025 08:40 AM
தேனி: தேனி மாவட்டத்தில் காகிதமில்லா நீதிமன்ற நடைமுறைகளை உறுதிப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும் இ.பைலிங் நடைமுறையைஎளிமைப்படுத்த ஆவணங்கள் பதிவேற்றும் பணிகளில் வழக்கறிஞர்களுக்கு உதவ 10 பணியாளர்கள் நியமனம் செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் ஆலோசனைகூட்டத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தெரிவித்தார்.
டிஜிட்டல் இந்தியா'திட்டத்தின்படி காகித பயன்பாடு இல்லாத நீதிமன்ற நடைமுறையாக இ.பைலிங் நடைமுறைஉச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் அமலானது. மாவட்ட நீதிமன்றங்களிலும் நடைமுறை படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றங்கள், உரிமையியல்நீதிமன்றங்கள், முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் இ.பைலிங் நடைமுறை டிச.1 முதல் அமலானது. இந் நடைமுறையில், இ.கோர்ட்ஸ் போர்ட்டல்மேம்படுத்தாமல் இருப்பது, சர்வர் பிரச்னை, இணையத்தள வசதி குறைபாடு, டிஜிட்டல் ஆவணங்களுக்கான ஒப்புதல் அளிப்பதில் ஏற்படும் நம்பகத் தன்மை உள்ளிட்ட காரணங்களால் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி லட்சுமிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் பேசுகையில், 'இ-பைலிங் நடைமுறையில் எளிமைப்படுத்தி வழக்கறிஞர்களுக்கு உதவ ஊழியர்கள் 10 பேர் நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. டிச.1க்கு பின் தாக்கல் செய்யும் வழக்கு ஆவணங்கள் ஆன்லைன்மூலமாகத்தான் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு முன் தாக்கலான வழக்குகளின் ஆவணங்கள் நேரடியாக பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வழக்கறிஞர்கள் நீதிமன்றங்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்றார்.

