/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் தப்பிய கைதி சிறையில் அடைப்பு
/
தேனியில் தப்பிய கைதி சிறையில் அடைப்பு
ADDED : அக் 08, 2025 09:04 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்ற கைதி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் தனிப்படை போலீசார் கைது செய்து, நீதித்துறை நடுவர் நீதிமன்ற உத்தரவில் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
தேனி பொம்மைய கவுண்டன்பட்டி மீனாதேவி. இவரது மகன் கூலித் தொழிலாளி சுபாஷ்சங்கர் 25. தாயாரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததால் ஏற்பட்ட தகராறில் தாயாரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். தாயார் புகாரில் சுபாஷ் சங்கரை அல்லிநகரம் போலீசார் கைது செய்து, தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிறைக்கு கூட்டிச் சென்ற போது, 'திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன் சுபாஷ் சங்கர் தப்பிச் ஓடிவிட்டார். இது குறித்து சம்பவத்தில் அல்லிநகரம் சிறப்பு எஸ்.ஐ.க்கள் முருகன், தங்கம் ஆகியோரை தேனி ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., சினேஹாபிரியா உத்தரவிட்டார். தப்பிச்சென்ற கைதியை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.
மேலும் தனிப்படையினர் மதுபார்களில்கூட சுபாஷ்சங்கரின் புகைபடத்தை காண்பித்து, தீவிரமாக தேடினர். இந்நிலையில் நேற்று அதிகாலை வேடசந்துாரில் பதுங்கி இருந்த கைதி சுபாஷ் சங்கரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, மீண்டும் தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.