ADDED : ஏப் 23, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் 525 இடங்களில் இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் நம்ம ஊரு கதை என்ற நிகழ்வு நடந்தது.
இதில் 444 கதைகளை மாணவர்கள் சமர்ப்பித்தனர். வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கதைகள் மாவட்டபோட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மாவட்ட அளவில் தேனி, பெரியகுளம் மையங்கள் மாவட்ட அளவில் தேர்வாகின. தேர்வான 129 மாணவர்களுக்கு பெரியகுளம், தேனி வட்டார வளமையங்களில் பரிசளிப்பு விழா நடந்தது.
மாவட்ட உதவி திட்ட அலுவர் மோகன் விழாவிற்கு தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. தன்னார்வலர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.