ADDED : செப் 08, 2025 06:28 AM
ஆண்டிபட்டி : 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ராஜ கம்பளத்தார் சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு - பாராட்டு விழா ஆண்டிபட்டியில் தனியார் விடுதி கூட்ட அரங்கில் நடந்தது.
தேனி மாவட்ட ராஜா கம்பளத்தார், ஆண்டிபட்டி மாலைக் கோயில் சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்கத்தின் நிரந்தர தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கோபால், முத்துரங்க விஜயன், துணைச் செயலாளர்கள் பால்பாண்டியன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலைக்கோயில் சங்கச் செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் பொதுச் செயலாளர் தங்கராஜ், தலைமைச் செயலக அலுவலர் தனவேல் பாண்டி, இன்ஜீனியர் பாலகிருஷ்ணன், சிலமலை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பழனிசாமி உட்பட பலர் வாழ்த்திப் பேசினர்.
10ம் வகுப்பு, பிளஸ் 2, பல்வேறு உயர் கல்வி பயிலும் 116 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. விழா ஒருங்கிணைப்புகளை பாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். மாலைக்கோயில் சங்கப் பொருளாளர் காமயசாமி நன்றி கூறினார்.