ADDED : செப் 29, 2026 06:43 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.30–தேனியில் பணிநிறைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் முதலாமாண்டு விழா, 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சங்க நிர்வாகி பால்ராஜ் தலைமை வகித்தார். சங்கரப்பன் முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., முருகன், டாக்டர்கள் அகமதுசேக், பிரீத்தி உள்ளிட்டோர் பரிசுகள், சான்றிதழ் வழங்கினர்.சங்க நிர்வாகிகள் அப்துல்ஜப்பார், பிரபாகரன் உள்ளிட்டோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
