/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தெரு விளக்குகள் பராமரிப்பில் சிக்கல்
/
தெரு விளக்குகள் பராமரிப்பில் சிக்கல்
ADDED : ஜூலை 10, 2025 03:20 AM
சின்னமனூர்: சின்னமனூரில் பல வீதிகளில் தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. குறிப்பாக லட்சுமி நாராயண பெருமாள் கோயிலிற்கு செல்லும் வீதியில் தொடர்ந்து பழுதேற்பட்டுள்ளது.
சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. நகரில் விரிவாக்க பகுதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது சுகாதாரம், தெரு விளக்குகள் பராமரிப்பு , குடிநீர் வினியோகத்தில் தேக்கநிலை உள்ளது. சாக்கடை சுத்தம் செய்யாததால் பல தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. தெருவிளக்குகள் பராமரிப்பு, குப்பை சேகரம் செய்யும் பணிகளை தனியார் மயமாக்கிவிட்டனர்.
தெருவிளக்குகள் வ.உ.சி., குறுக்கு வீதிகள், காந்திநகர் காலணி, லட்சுமி நாராயண பெருமாள் கோயில் வீதிகளில் பழுதடைந்துள்ளன. குறிப்பாக லட்சுமி நாராயண பெருமாள் கோயிலிற்கு செல்லும் வீதியில் ஒரு மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. மாலையில் கோயிலிற்கு செல்லும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தெருவிளக்குகள் பழுதை சரி செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.