/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்வாணையம் மூலம் நிரப்பும் உத்தரவால் கால்நடை ஆய்வாளர் நியமனத்தில் சிக்கல்
/
தேர்வாணையம் மூலம் நிரப்பும் உத்தரவால் கால்நடை ஆய்வாளர் நியமனத்தில் சிக்கல்
தேர்வாணையம் மூலம் நிரப்பும் உத்தரவால் கால்நடை ஆய்வாளர் நியமனத்தில் சிக்கல்
தேர்வாணையம் மூலம் நிரப்பும் உத்தரவால் கால்நடை ஆய்வாளர் நியமனத்தில் சிக்கல்
ADDED : அக் 12, 2025 05:41 AM
கம்பம் : தேர்வாணையம் மூலம் கால்நடை ஆய்வாளர் பணியிடம் நிரப்பும் உத்தரவால் கிளை நிலையங்கள் பூட்டி உள்ளதால் கால்நடைகள் சிசிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி, சினை ஊசி செலுத்துவது, நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட பணிகளை கால்நடை பராமரிப்பு துறை மேற்கொள்கிறது. கிளை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகளில் கால்நடை சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
கிராமங்களில் செயல்படும் கிளை நிலையங்களில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. பிளஸ் 2 முடித்தவர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நியமித்து,ஒசூரில் ஓராண்டு பயிற்சி வழங்கி நியமனம் செய்கின்றனர்.
கடைசியாக கடந்த 2012ல் கால்நடை ஆய்வாளர் நியமனம் செய்ததோடு சரி. அதன் பின் நியமனம் செய்யவில்லை. இதற்கு காரணம் தேர்வாணையம் மூலம் தேர்வெழுதி, அதில் இருந்து ஆய்வாளர்களை தேர்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனால் நியமனம் செய்ய முடியவில்லை. புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்பதால் , எந்த அடிப்படையில் வினாத்தாள் தயாரிப்பது போன்ற சிக்கல்களால் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் 13 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான கிளை நிலையங்கள் பூட்டியே உள்ளன.
தேனி மாவட்டத்தில் 58 கிளை நிலையங்களில் 35 ஆய்வாளர்கள் உள்ளனர். 23 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதனால் கிராமங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதில் தேக்கநிலை உள்ளது. இந்நிலையில் இப் பதவிக்கு கால்நடை நர்சிங் முடித்த மாணவிகளை நியமனம் செய்யலாமா என்ற ஆலோசனை உள்ளதாக கூறுகின்றனர்.
கிராமங்களில் பூட்டியுள்ள கிளை நிலையங்கள் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.