/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திட்டம் குருதிக்கொடையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தாலும் அபாயம்
/
திட்டம் குருதிக்கொடையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தாலும் அபாயம்
திட்டம் குருதிக்கொடையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தாலும் அபாயம்
திட்டம் குருதிக்கொடையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தாலும் அபாயம்
ADDED : நவ 15, 2025 04:51 AM
தேனி மாவட்டத்தில் இந்தாண்டு 100 க்கும் அதிகமான ரத்ததான முகாம்கள் நடத்தி 1300க்கும் அதிகமான குருதி கொடையாளிகளால், 10 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இவை தேனி மருத்துவக்கல்லூரி, பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பிரசவம், விபத்து, ஆப்பரேஷன் உட்பட பல்வேறு தேவைகளுக்கு ரத்தம் வழங்கப் பட்டுள்ளது.
ஏ,பி,ஏபி,ஓ, என நான்கு வகைகளில், பாசிட்டிவ், நெகட்டிவ் மற்றும் 'பாம்பே ஓ' என 9 வகையான ரத்த வகைகள் உள்ளன. நன்கொடையாக பெறப்படும் ரத்தம் தேனி மருத்துவக்கல்லூரி, பெரியகுளம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்தவங்கிகளில் பாதுகாக்கப்படுகிறது. சேமிக்கப்படும் ரத்தம் 35 நாட்களுக்கு மட்டுமே உயிர் இருக்கும்.
ரத்தத்தில் நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து, நோயாளிகளுக்கு பொருத்தமான ரத்தத்தை 'கிராஸ் மேட்சிங்' செய்து நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் பாரதி கூறுகையில், தற்போது ஆண்டுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுதி கொடையாளர்கள் உள்ளனர்.
வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 4 ஆயிரமாக உயர்த்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 55 வயது வரை
உள்ளவர்கள் ரத்ததானம் வழங்கலாம். அவர்களது உடல் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5க்கு மேல் உள்ளவர்கள் வழங்கலாம்.
ஒரு ஆண்டுக்கு மூன்று மாதம் இடைவெளியில் 4 முறை ரத்ததானம் செய்யலாம்.
அளவு அதிகரித்தால் சிக்கல் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 15 முதல் 17 வரை இருந்தால் 'பாலிசைட்டிமியா' எனும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இவர்கள் தொடர்ந்து ரத்ததானம் செய்வதினால் உடலில் 'கொழ கொழப்பான' ரத்தம், இலகுவாகி உடலில் அனைத்து பாகங்களுக்கும் சீராக ரத்தம் செல்லும். மேலும் ரத்ததானம் வழங்குபவர்களுக்கு புற்று நோய், இதய நோய், நுரையீரல் நோய் உட்பட பல்வேறு நோய்கள் தாக்கம் மிகக்குறைவாக இருக்கும்.
நோயாளிகளுக்கு ஆப்பரேஷன் செய்யும் போது, அவரது வீட்டிலிருந்து ஒருவர் ரத்ததானம் செய்தால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இதனால் ரத்த தட்டுப்பாடு வராது. ரத்தம் கொடுப்பதினால் உடல் நலம் பாதிக்கும் என்ற தவறான தகவல்களை பரப்புபவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். ரத்ததானம் செய்வதினால் உடல் நலம் மேம்படும் என்றார்.-

