தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பழங்குடி மாணவியர் விடுதியில் போராட்டம்

 பழங்குடி மாணவியர் விடுதியில் போராட்டம்

 பழங்குடி மாணவியர் விடுதியில் போராட்டம்


ADDED : ஜன 30, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு: மூணாறில் இக்காநகரில் பழங்குடியினர் மாணவிகளுக்கு 'மெட்ரிக் ஹாஸ்டல்' உள்ளது. விடுதியில் கடந்த ஒரு மாதமாக காஸ் சிலிண்டர் பற்றாக்குறையால் மாணவிகளுக்கு முறையாக உணவு வழங்கவில்லை. அதனை அறிந்த பெற்றோர்கள் மாணவிகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் இரண்டு காஸ் சிலிண்டர்களை வாங்கி கொடுத்து பிரச்னைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தனர்.

போராட்டம்: விடுதியில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி முதுவான் சமுதாய சங்கத்தினர் விடுதி முன் போராட்டம் நடத்த கைகளில் காய்கறி தட்டுகளை ஏந்தி சென்றனர். அவர்களை விடுதி அருகே தடுத்ததால் ஆத்திரத்தில் போலீசார் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். அதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்ட நிலையில் பூட்டிய கேட் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் சமுதாய சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முடிவு: பழங்குடியினர் கிராமங்களில் இருந்து விடுதி திரும்பும் மாணவிகளின் போக்குவரத்து செலவை அரசு ஏற்க வேண்டும். புதிய ஏஜென்சியை அணுகி காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண வேண்டும்.

விடுதியில் நிரந்தர சமையல்காரரை நியமிக்க வேண்டும்.

மத்திய அரசு வழங்கிய ரூ.40 லட்சம் நிதியை கொண்டு விடுதியில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us