/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 26, 2025 03:28 AM
ஆண்டிபட்டி: பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் , ஆர்ப்பாட்டம் ஆண்டிபட்டியில் நடந்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேன் சுடர் பெண்கள் இயக்கம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு இயக்கம் சார்பில் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி துவக்கி வைத்தார்.
ஆண்டிபட்டி டாக்சி ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் தேன் சுடர் பெண்கள் இயக்கப் பொருளாளர் பாண்டீஸ்வரி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் நாகஜோதி முன்னிலை வகித்தார்.
நாகலட்சுமி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சமம் குடிமக்கள் இயக்க மாநில தலைவர் ராஜன், தமிழ்நாடு பெண்கள் சங்க மாநில செயலாளர் நிவேதா, தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில ஆலோசகர் முருகேசன், தேன் சுடர் பெண்கள் இயக்க ஆலோசகர் கருத்தம்மாள் உட்பட பலர் பேசினர்.
தேன் சுடர் பெண்கள் இயக்க தலைவர் ராமலட்சுமி நன்றி கூறினார். ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

