தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் தர்ணா

 ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் தர்ணா

 ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் தர்ணா


ADDED : பிப் 15, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லாததால் அரண்மனைப்புதுார் விலக்கில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்களாக ரோடு மறியல், தர்ணா, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று அரண்மனைப்புதுார் விலக்கில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். போலீசார் அனுமதி மறுத்ததால் அரண்மனைப்புதுார் விலக்கில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைப்பாளர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். நிர்வாகிகள் தேன்மொழி, ராதிகா, மாவட்ட செயலாளர் சுமதி, மாவட்ட தலைவர் சுமதி, கிருபாவதி, சுப்புராஜ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us