ADDED : பிப் 17, 2026 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்., 3 முதல் மறியல், தர்ணா, காத்திருப்பு போராட்டம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே கருப்பு உடை அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் அன்பழகன், தனுஷ்கோடி, பாலகிருஷ்ணன், தேன்மொழி, விமலா, ராதிகா, கிருபாவதி, சுமதி, குமரன், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

