/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சேதமடைந்த மண் ரோட்டில் சென்றுவர பொதுமக்கள் சிரமம் கொடுவிலார்பட்டி அண்ணாமலை நகரில் அடிப்படை வசதிக்கு திண்டாட்டம்
/
சேதமடைந்த மண் ரோட்டில் சென்றுவர பொதுமக்கள் சிரமம் கொடுவிலார்பட்டி அண்ணாமலை நகரில் அடிப்படை வசதிக்கு திண்டாட்டம்
சேதமடைந்த மண் ரோட்டில் சென்றுவர பொதுமக்கள் சிரமம் கொடுவிலார்பட்டி அண்ணாமலை நகரில் அடிப்படை வசதிக்கு திண்டாட்டம்
சேதமடைந்த மண் ரோட்டில் சென்றுவர பொதுமக்கள் சிரமம் கொடுவிலார்பட்டி அண்ணாமலை நகரில் அடிப்படை வசதிக்கு திண்டாட்டம்
ADDED : அக் 04, 2025 04:21 AM

தேனி: தேனி ஒன்றியம், கொடுவிலார்பட்டி ஊராட்சி, முதல் வார்டு அண்ணாமலை நகரில் சேதமடைந்த ரோடு, தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இவ்வூராட்சியில் அண்ணாமலைநகர் 1, 2, 3 அதன் பிரதான குறுக்குத்தெரு என, மொத்தம் 4 தெருக்கள் உள்ளன. இந்த வார்டில் 2வது தெரு முகப்பில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்குகள் இல்லை. மீதமுள்ள 2ல் தெருவிளக்குகளில் போதியவெளிச்சல் இன்றி தெருக்கள் இருள் சூழ்ந்து உள்ளன.
ஊராட்சி சார்பில் 2வது தெருவில் சிமென்ட் ரோடு அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் சரளைக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
இதில் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கிறது. மேலும் 2வது தெரு முகப்பில் சில அடிதுாரம் சிமென்ட் ரோடு அமைக்காமல் மண் ரோடாக உள்ளது. மூன்றாவது தெருவும் மண்ரோடாக உள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைகின்றனர். இப்பகுதி மக்கள் கூறியதாவது:
சாக்கடையால் சுகாதாரக்கேடு சிவரஞ்சனி, அண்ணாமலை நகர் 2வது தெரு: இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரோடு அமைத்தனர். அப்போது ரோட்டில் இருபுறமும் சாக்கடை கால்வாய்அமைக்கப்பட்டது.
மிகவும் சிறிய அளவில் அமைக்கப்பட்டதால் மழை காலங்களிலும், கழிவுநீர் தெருவில் செல்வதால்சுகாதாரக்கேடு, துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாக்கடை முறையாக கட்டித்தர வேண்டும்.
சில நேரங்களில் குடிநீர் கலங்கலமாக வினியோகம்செய்யப்படுகிறது. எனவே, குடிநீரை குளோரினேசன் செய்து வினியோகம் செய்ய, தேனி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண் ரோட்டால் சிரமம் சுதா, அண்ணாமலை நகர்: மூன்று தெருக்களும் இணையும் தெருவில் மாற்றுத்திறனாளி பெண் ஆசிரியை பணியாற்றுகிறார். அவர் மூன்று சக்கர வாகனத்தை மண் ரோட்டில் இயக்க முடியாமல் குண்டும் குழியுமான ரோட்டில் இயக்கி சிரமப்படுகிறார்.
இதனால்2வது தெருவின் முகப்பில் மண்ரோட்டில் சிமென்ட் ரோடு அமைக்க வேண்டும். மேலும், மூன்றாவது தெருவிலும் மண்ரோடாக உள்ளது.
அதனை சீரமைத்து வழங்க வேண்டும். அடிக்கடி கொசுக்கடி உள்ளது. கொசு மருத்துவ வாரத்திற்கு 2 முறையான தெளிக்க ஒன்றிய நிர்வாகம் முன் வர வேண்டும்.