தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/கிராம சபை கூட்டத்தில் அடிப்படைவசதிகள் கோரி பொதுமக்கள் மனு

கிராம சபை கூட்டத்தில் அடிப்படைவசதிகள் கோரி பொதுமக்கள் மனு

கிராம சபை கூட்டத்தில் அடிப்படைவசதிகள் கோரி பொதுமக்கள் மனு


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள், அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

போடி ஒன்றியம் கோடாங்கிபட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வைத்திநாதன் பார்வையாளராக பங்கேற்றனர். பி.டி.ஓ.,க்கள் சீத்தாராமன், சுபாஷ் சந்திரபோஸ் தலைமை வகித்தனர். அரசு திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, மகளிர் திட்ட இயக்குநர் வீராச்சாமி, தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் திருப்பதி கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

தேனி ஒன்றியம் கொடுவிலார்பட்டியில் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணை பி.டி.ஓ., தனலட்சுமி தலைமை வகித்தார். ரோடு, தண்ணீர் வசதி கேட்டு 5 மனுக்கள் அளிக்கப்பட்டன.ஊராட்சி செயலாளர் வேல்முருகன் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

நாகலாபுரம் ஊராட்சியில் சங்ககோணாம்பட்டி கிராமசபை நடந்தது. துணை பி.டிஓ.,பானுமதி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் நிவேஷ், மின்வாரிய உதவிப்பொறியாளர் சுந்திரபாண்டியன், கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அடிப்படை வசதிகள் கோரி 12 மனுக்கள் வழங்கப்பட்டன. ஊராட்சி செயலாளர் சுருளி கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

பூமலைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு பி.டி.ஓ., மைதிலி தலைமை வகித்தார். துணை பி.டி.ஓ., சரவணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி 8 மனுக்கள் அளிக்கப்பட்டன. ஊராட்சி செயலாளர் பாண்டி கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us