/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புத்தாண்டு தினத்திலும் தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் பாராட்டு

ADDED : ஜன 02, 2026 05:38 AM
கூடலுார்: லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றில் ஆற்றில் மூழ்கிய தம்பதியின் உடலை தேடி வந்த நிலையில் மனைவியின் உடல் மட்டும் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது. 3 நாட்களாகியும் கணவனின் உடல் கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்.
லோயர்கேம்பை சேர்ந்தவர் சங்கர் 55. இவரது மனைவி கணேஸ்வரி 50. டிச.30ல் இவர்கள் லோயர்கேம்ப் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இவர் களது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கண்டுபிடிக்க முடியாததால் நேற்று முன்தினம் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். காஞ்சிமரத்துறை அருகே கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் மாலை வரை சங்கரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று 3வது நாளாக கம்பம் மற்றும் உத்தம்பாளையம் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் முழுமையாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று மாலை வரை சங்கரின் உடல் கிடைக்கவில்லை. புத்தாண்டு தினத்தில் முழுமையாக தேடும் பணியில் ஈடுபட்டிருந்த கம்பம், உத்தம்பாளையம் தீயணைப்புத் துறையினரையும், காவல்துறையினரையும், அப்பகுதி இளைஞர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இன்று மீண்டும் சங்கரின் உடலை தேடும் பணி துவங்கும் என போலீசார் தெரிவித்தனர்.