ADDED : பிப் 24, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சாரல் மழை பெய்தது. இரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்தது. இதனால் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
