/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நவம்பரில் தொடர்ந்து சரியும் மழை அளவு
/
நவம்பரில் தொடர்ந்து சரியும் மழை அளவு
ADDED : டிச 05, 2025 05:43 AM
தேனி: மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நவம்பரில் மழை அளவு குறைந்து வருகிறது. கடந்தாண்டு 1361.3 மி.மீ., பதிவான நிலையில், இந்தாண்டு 1076 மி.மீ., பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் 12 இடங்களில் மழைமானிகள் வைத்து பெய்யும் மழை அளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு மழை சில மாதங்களில் குறைந்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ஆண்டிபட்டியில் 68.6 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 32.4 மி.மீ., போடி 71.4 மி.மீ., கூடலுார்57.2 மி.மீ., மஞ்சளாறு அணை 91 மி.மீ., பெரியகுளம் 98.6 மி.மீ., பெரியாறு அணை 127.6 மி.மீ., சோத்துப்பாறை அணை 71.2 மி.மீ., தேக்கடி 208 மி.மீ., உத்தமபாளையம் 67 மி.மீ., வைகை அணை 52.2 மி.மீ., வீரபாண்டி 72.2 மி.மீ., சண்முகாநதி அணை 59.2 மி.மீ., என மொத்தம் 1076.6 மி.மீ., பதிவானது.
நவ., 2021ல் 3669.7 மி.மீ., 2022ல் 2035.1 மி.மீ., 2023ல் 3123.9 மி.மீ., கடந்தாண்டு 1361.3 மி.மீ., மழை பெய்துள்ளன. இவற்றை ஒப்பிடுகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நவ.,ல் இந்தாண்டு மழை குறைவாக பதிவாகி உள்ளது.

