UPDATED : அக் 17, 2026 04:59 PM
ADDED : அக் 17, 2026 04:54 PM

அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறில் தென்மேற்கு பருவ மழை கடந்தாண்டை விட இந்தாண்டு 40 சதவீதம் குறைவு என தெரியவந்தது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் ஜூனில் துவங்கி செப்., இறுதி வரை நீடிக்கும். இந்தாண்டு ஜூன் 4ல் துவங்கி அக்.16ல் முடிவுக்கு வந்தது. மூணாறில் சராசரியாக 338 செ.மீ., முதல் 350 செ.மீ., வரை மழை பதிவாகும். இந்தாண்டு 224 செ.மீ., மழை பெய்தது. கடந்தாண்டு 337 செ.மீ., பெய்த நிலையில், அதை ஒப்பிடுகையில் இந்தாண்டு 40 சதவீதம் குறைவு என தெரியவந்தது.
கடந்தாண்டு ஜனவரி 1 முதல் செப்.30 வரை 510 செ.மீ., மழை பதிவானது. அதே கால அளவில் இந்தாண்டு 255.8 செ.மீ., மழை பெய்தது. இது 50 சதவீதம் குறைவாகும்.
