ADDED : செப் 21, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.22–மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளிலும் சாரல் மழையும், சில பகுதிகளில் கன மழையும் பெய்து வருகிறது.
மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை பதிவு செய்ய 13 இடங்களில் மழைமானி வைத்து கண்காணிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் பதிவான மழை அளவு ஆண்டிபட்டி 20.2 மி.மீ., வீரபாண்டி 5.4, பெரியகுளம் 18, மஞ்சளாறு 22,சோத்துப்பாறை 16.6, வைகை அணை 12.4, போடி 14, உத்தமபாளையம் 3.6, கூடலுார் 4.8, பெரியாறு அணை 12.2,தேக்கடி 22.6, சண்முகாநதி அணை 3.4 மி.மீ., என மொத்தம் 155.2 மி.மீ., மழை பதிவானது. அரண்மனைப்புதுாரில் மழை பதிவாக வில்லை. சராசரியாக 11.93 மி.மீ., மழைபதிவானது.
