ADDED : அக் 25, 2024 05:55 AM

அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஆர்.ஐ.,(வருவாய் ஆய்வாளர்) அலுவலக கட்டிடம் மழைக்கு ஒழுகுவதால் ஆவணங்களை பாதுகாக்க முடியாமல் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர்.
ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு அருகே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அலுவலகம் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை வழியாக மழை நீர் ஒழுகி அலுவலகத்தில் தேங்குகிறது. இதனால் மழைக்காலங்களில் அலுவலகப் பணிகள் பாதிப்படைகிறது. ஆவணங்களையும் பாதுகாக்க முடியாமல் அலுவலர்கள் திண்டாடுகின்றனர். பழமையான இக்கட்டத்தை அப்புறப்படுத்திவிட்டு ஆர்.ஐ., அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
