தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ராஜவாய்க்கால் சீரமைப்புக்கு ரூ.27 கோடிக்கு மதிப்பீடு

ராஜவாய்க்கால் சீரமைப்புக்கு ரூ.27 கோடிக்கு மதிப்பீடு

ராஜவாய்க்கால் சீரமைப்புக்கு ரூ.27 கோடிக்கு மதிப்பீடு


UPDATED : நவ 11, 2026 06:17 PM

ADDED : நவ 11, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 06:17 PM ADDED : நவ 11, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி நகர்பகுதியில் உள்ள ராஜவாய்க்காலை சீரமைத்து கரைகளில் கான்கிரீட் சாய்வு தளம் அமைக்க ரூ.27 கோடி மதிப்பீடு தயாரித்து அரசுக்கு சமர்ப்பித்துள்ளதாக நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.

தேனி நகரின் மையப்பகுதியில் ராஜவாய்க்கால் செல்கிறது. கொட்டக்குடி ஆற்றில் துவங்கும் இந்த வாய்க்கால் 2.47 கி.மீ., துாரம் பயணித்து மதுரை ரோட்டில் உள்ள ராஜாகுளத்தில் தேங்குகிறது. இந்த வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவில் சில ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டன. இதில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டிருந்த பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட் உள்ளிட்டவையும் இடிக்கப்பட்டன. இதில் பஸ் ஸ்டாண்ட்டில் மட்டும் நகராட்சி சார்பில் ரூ.2.26 கோடி மதிப்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மற்ற இடங்களில் ராஜவாய்க்காலில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இது பற்றி நீர்வளத்துறையினர் கூறுகையில், ‘ராஜவாய்க்காலில் சிமென்ட் தளம், இருகரைகளிலும் கற்கள் மூலம் சாய்வு தளம், 5 இடங்களில் பாலம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள், சில இடங்களில் வேலிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முன்பு ரூ.24.50 கோடி மதிப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்ப பட்டது. தற்போது புதிதாக ரூ.27 கோடி மதிப்பீடு தயாரித்து அனுப்பி உள்ளோம். இந்த அறிக்கை உயர் அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் அனுமதி அளிக்கப்படும். அதன்பின் பணிகள் துவங்கும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us