/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை, கருவிழி பதிவு செய்ய அறிவுறுத்தல் குடும்ப உறுப்பினர்களை உறுதி செய்ய அரசு உத்தரவு
/
ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை, கருவிழி பதிவு செய்ய அறிவுறுத்தல் குடும்ப உறுப்பினர்களை உறுதி செய்ய அரசு உத்தரவு
ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை, கருவிழி பதிவு செய்ய அறிவுறுத்தல் குடும்ப உறுப்பினர்களை உறுதி செய்ய அரசு உத்தரவு
ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை, கருவிழி பதிவு செய்ய அறிவுறுத்தல் குடும்ப உறுப்பினர்களை உறுதி செய்ய அரசு உத்தரவு
ADDED : டிச 31, 2025 05:41 AM

மாவட்டத்தில் உள்ள ஏ.ஏ.ஒய், பி.எச்.எச். எனப்படும் அரிசி பெறும் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரகை, கருவிழி, பதிவு செய்வது அவசியம் என அரசுஉத்தரவிட்டுள்ளது. எனவேஇவ்வகை கார்டுகளில்பெயர் உள்ளவர்கள் பயோமெட்ரிக் பதிவை உறுதி செய்ய கூட்டுறவதுத்துறை அதிகாரிகள் அறிவுறு்த்தி உள்ளனர்.
மாவட்டத்தில் 431 முழு நேர ரேஷன் கடைகள், 111 பகுதிநேர ரேஷன் கடைகள் என 542 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சீனி, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஏ.ஏ.ஒய்., பி.எச்.எச்., என்.பி.எச்.எச்., சர்க்கரை அட்டை என மொத்தம் 4.33 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 12.28 லட்சம் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் பெறுகின்றனர்.
இதில் வறுமை கோட்டிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஏ.ஏ.ஒய்., ரேஷன் கார்டுகள் 36,082, பி.எச்.எச்., எனும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் 1.92 லட்சம் உள்ளன. இந்த இரு வகை கார்டுகளில் மட்டும் குடும்ப உறுப்பினர்கள் 6.69 லட்சம் பேர் உள்ளனர். இந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்க மத்திய அரசு முழு மானியம் வழங்குகிறது. இதனால் இந்த வகை கார்டுகளில் பெயர் உள்ளஉறுப்பினர்களை உறுதி செய்ய பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். இவ்வகை ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை அல்லது கருவிழி' பதிவு செய்ய அதிகாரிகள் ரேஷன் பணியாளர்கள் மூலம் அறிவுறுத்தி உள்ளனர்.
வெளியூரிலும் பதியலாம் கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் இது வரை இவ்வகை கார்டுகளில் உறுப்பினர்களாக உள்ள 5.80 லட்சம் பேர் பயோமெட்ரிக் பதிவு செய்துள்ளனர். 5 பேர் உள்ள குடும்பத்தில் மூவர் பதிவு செய்த நிலையில் இருவர் வெளியூரில் இருந்தால், அங்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று தங்கள் ரேஷன் கார்டு எண் விபரம் கூறி பயோ மெட்ரிக்' பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யாதவர்கள் பற்றிய விவரங்கள் ரேஷன்கடைகளில் தெரிந்து கொள்ளலாம் என்றனர்.
நோட்டீஸ் வழங்கியதற்கு எதிர்ப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் 100 சதவீதம் பயோ மெட்ரிக் முடிக்காத ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கார்டு தாரர்கள் வெளியூரில் வசித்தால், முகவரி மாறி சென்றிருந்தால் பணியாளர்கள் என்ன செய்வது. இதில் எங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க கூடாது என பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

