ADDED : நவ 07, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்டத்தில் தாலுகா வாரியாக ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைதீர் முகாம் நாளை (நவ. 8ல்) நடத்தப்பட உள்ளது. முகாம்கள் நடத்த துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
தேனி ஸ்ரீரங்காபுரம், பெரியகுளம் சொக்கத்தேவன்பட்டி, ஆண்டிபட்டி பிச்சம்பட்டி, உத்தமபாளையம் கன்னியம்பட்டி, போடி மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன்கடைகளில் முகாம்கள்நடக்கிறது.
பொதுமக்கள் ரேஷன் வினியோகம் தொடர்பான குறைகள், புகார்கள், ரேஷன் கார்டு பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

